சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் முகாம்

சென்னை: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் சிறுபான்மை மாணவ மாணவிகள் உயர்கல்விக்காக இந்தாண்டு ரூ.20 லட்சம் கல்வி கடன் உதவி வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 10 பகுதிகளில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. தென்சென்னை மாவட்ட தலைவர் முகமது நாஸிம் தலைமை வகித்தார்.

தென்சென்னை மாவட்ட சமூக மேம்பாட்டுதுறை ஒருங்கிணைப்பாளர் ஜெய்னுலாப்தீன் வரவேற்றார். நேஷன் விமன்ஸ் ப்ரண்ட் தென்சென்னை மாவட்ட செயலாளர் சையது பினா வாழ்த்துரை வழங்கினார். பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் முகமது இஸ்மாயில் 60 மாணவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் அளவிலான கல்வி உதவி தொகையை வழங்கினார். திருவல்லிக்கேணி பகுதி சமூக மேம்பாட்டு முறை ஒருங்கிணைப்பாளர் ரபிக் நன்றி கூறினார். முன்னதாக ஆக்சஸ் இந்தியா பயிற்றுவிப்பாளர் நவ்பல் மாணவர்களுக்கான திறன் வளர்ப்பு மற்றும் சுய விழிப்புணர்வு குறித்து வகுப்பு நடத்தினார்.

Tags : Students. ,Camp ,Minority , Education,Loan Camp, Minority,Students
× RELATED மாவட்டத்திலேயே 255 மாணவர்கள் சேர்த்து...