×

சூரியகாந்தி செடி செல்கள் மூலம் வைட்டமின்-இ உற்பத்தி அதிகரிக்கும் முறை கண்டுபிடிப்பு: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்

புதுடெல்லி: வைட்டமின்-இ உற்பத்தியை 10 மடங்கு அதிகரிக்கும் வகையில் சூரியகாந்தி செடி செல்களை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மரபு மாற்றம் செய்துள்ளனர். உடலில் சுரக்கும் சில நச்சு ரசாயனங்களால் உடலில் உள்ள திசுக்கள் சேதமடையும். இவற்றை தடுக்க வைட்டமின்-இ உதவுகிறது. சூரியகாந்தி செடி செல்கள் மூலம் வைட்டமின்-இ உற்பத்தியை அதிகரிக்கும் முறையை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பற்றிய ஆய்வு கட்டுரை ‘பயோ கெமிக்கல் இன்ஜினியரிங்’ என்ற இதழில் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:வைட்டமின்-இ ‘அல்பா-டோகோபெரல்’ என்ற ரசாயன தொகுப்பு முறையில் இருக்கும். சோதனைக் கூடங்களில் உள்ள அல்பா-டோகோபெரலை விட, தாவரங்களில் இயற்கையாக காணப்படும் அல்பா-டோகோபெரல் வீரியம் மிக்கதாக இருக்கும். எனவே, ரசாயன முறையிலான வைட்டமின்-இக்கு மாற்றாக, ஒரே விதமான செல்களை உருவாக்கும் வகையில் தாவரங்களை பரிசோதனைக் கூடங்களில் வளர்த்து வைட்டமின்-இ உற்பத்தியை அதிகரிக்க முடியும்.இந்த ஆய்வில் சூரியகாந்தியில் வைட்டமின்-இ உற்பத்திக்கு காரணமான ஜீன்களை, அராபிடோப்சிஸ் என்ற தாவரத்தில் ஆராய்ச்சியாளர்கள் செலுத்தியுள்ளனர்.

மரபு ஆராய்ச்சிக்கு இந்த தாவரம்தான் மாதிரியாக பயன்படுத்தப்படுகிறது. வைட்டமின்-இ உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இந்த தாவரங்களின் செல்களை, ஆராய்ச்சியாளர்கள் மரபு பொறியியல் மாற்ற முறையில் இணைத்தனர்.  இதற்கு கம்ப்யூட்டர் மாடலிங் மற்றும் செல்லுலர் இன்ஜினியரிங் என்ற இரு அணுகு முறைகளும் இணைந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறை அல்பா-டோகோபெரல் உற்பத்தி அதிகமாவதற்கு எந்த முக்கிய என்சைம்கள் காரணம் என கண்டறிய உதவியது. இணைக்கப்பட்ட செல்களில், குறிப்பிட்ட என்சைம்களின் செயல்பாட்டை அதிகரித்து அல்பா-டேகோபெரல் உற்பத்தி 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் உற்பத்தி செய்த சூரியகாந்தி விதைகளில் உள்ள வைட்டமின்-இ அளவை விட, பரிசோதனைக் கூடத்தில் வளர்க்கப்பட்ட தாவர செல்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட வைட்டமின்-இ அளவு 10 மடங்கு அதிகமாக இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : IIT researchers ,sunflower plants ,Chennai. Sunflower Plants ,Chennai ,Vitamin E , Discovery , Vitamin E, Production,Sunflower Plants, IIT Researchers in Chennai
× RELATED க.பரமத்தி பகுதியில் தொடர் மழை செங்கல்...