×

பூமி தட்டுக்கள் நகர்வதால் சுருங்கும் ஐதராபாத், பெங்களூரு

கொல்கத்தா: இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குனர் சந்தீப் சாம் கூறியதாவது:மேற்கு வங்கத்தில் உள்ள சால்ட்லேக், பெரும்பாலும் நீர் நிலைகளால் சூழ்ந்த்துள்ளது. இதனை சுற்றியுள்ள மெட்ரோ நகரங்களில் தற்போது நிலத்தடி நீர்மட்டம் மோசமான நிலையில் காணப்படுகிறது. பல இடங்களில் நிலத்தில் நீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தின் பரப்பளவானது குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். அருகில் உள்ள கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலப்பரப்பானது சுருங்கி வருகின்றது. சால்ட்லேக்கில் உள்ள புவியியில் ஆய்வு மையத்தில், ஜிபிஎஸ் கருவி மூலமாக கடந்த இரண்டரை ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில், பூமி தட்டுக்களின் நகர்வால் இந்த பகுதியில் நிலப்பரப்பானது சுருங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஏறத்தாழ 19 முதல் 20 மிமீ அளவுக்கு நிலப்பகுதி குறைந்து வருவது தெரியவந்துள்ளது. 300 கிமீ சுற்றளவுள்ள பகுதிகளின் தரவுகளை இந்த மையத்தால் பெறமுடியும் என்பதால், கொல்கத்தாவும் சுருங்கி வருகிறது என்றும் நாங்கள் கூறுகின்றோம். .

எங்களது கணக்கீட்டின்படி, செங்குத்து மற்றும் கிடைமட்டமாக நிலப்பரப்பின் பகுதியானது ஒரு மில்லிமீட்டர் கூடும் அல்லது குறையும். நிலப்பரப்பு சுருங்குவதற்கு காரணம் நிலத்தடி நீர்மட்டம் இல்லாதது அல்லது டெக்டோனிக் அடுக்குகள் விலகுதல் தான். ஆனால், இதனை உறுதியாக கூற இயலாது. நாடு முழுவதும் உள்ள ஜிபிஎஸ் நிலையங்கள் மூலமாக ஜெய்ப்பூர், டேராடூன், ஐதராபாத் மற்றும் பெங்களூர் உள்ளிட்டவை சுருங்கி வருவது ெதரியவந்துள்ளது. இமயமலை அடிவாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் கூட சுருங்குகின்றன. அதேநேரத்தில் இமயமலை தொடரும், பாட்னா, நாக்பூர் உள்ளிட்ட பகுதிகள் பூமிதட்டின் நகர்வு காரணமாக விரிவடைகின்றன. ஜெய்ப்பூர் மற்றும் சால்ட்  லேக் அதனை சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.

Tags : Hyderabad ,Bangalore ,earth , Hyderabad , Bangalore, shrinking, earth moves
× RELATED ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை...