×

பத்மநாபசுவாமி கோயிலுக்கு ரூ.1.67 கோடியை தமிழகம் வழங்குகிறது: 2001 முதல் உள்ள தஸ்திக் அலவன்ஸ் பாக்கி

திருவனந்தபுரம்: கேரளாவில்  இருந்து குமரி மாவட்டம் 1956ம் ஆண்டு பிரிக்கப்பட்டது. அப்போது  திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள்  திருவட்டார் உள்பட சில பகுதிகளில்  இருந்தன. இந்த நிலங்களை கடந்த 1964ல்  சட்டப்படி தமிழக அரசு கையகப்படுத்தியது.அப்போது ஒவ்வொரு ஆண்டும் ஒரு  குறிப்பிட்ட தொகையை (தஸ்திக் அலவன்ஸ்) பத்மநாப சுவாமி கோயிலுக்கு தமிழகம்  கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.

முதலில் தஸ்திக் அலவன்ஸ் தமிழக அரசு சார்பில்  வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 2001 முதல் இந்த தொகையை தமிழக அரசு  கொடுக்கவில்லை. இதையடுத்து தொகையை வழங்கக்கோரி பத்மநாப சுவாமி  கோயில் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது. தற்கான பேச்சு வார்த்தையில், பாக்கி தொகை ₹1.67 கோடியை வழங்க  தீர்மானிக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில்,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஒப்புதல் அளித்துள்ளார்.

Tags : Padmanabhaswamy Temple Tamilnadu ,Padmanabhaswamy temple , Tamilnadu pays ,Rs 1.67 crore ,Padmanabhaswamy temple
× RELATED ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலுக்கு1.67 கோடி தொகை அரசு வழங்கியது