பரங்கிமலை ஒன்றியத்தில் 32 நீர்நிலைகளில் சீரமைப்பு பணி

தாம்பரம்: பரங்கிமலை ஒன்றியத்தில் 32 நீர்நிலைகளில் ரூ.63 லட்சம் செலவில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. பரங்கிமலை ஒன்றியத்தில் 15 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள ஏரி, குளங்களை, ஊரக வளர்ச்சி துறையினர், குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ், தூர்வாரி சீரமைக்க முடிவு செய்தது. அதன்படி, 32 நீர்நிலைகளில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

இதில், பரங்கிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் 8 ஏரிகள் ரூ.40 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில்  தூர்வாரி சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், 24 குளங்கள் ரூ.22 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏரி, குளங்களில் கரைகள் சீரமைக்கப்பட்டு மழைநீர் தேங்கும் வகையில் தூர்வாரி சீரமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஏரி, குளங்களுக்கு நீர் வரும் கால்வாய்களும் சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

Tags : water bodies ,Parangimalai Union Parangimalai Union , Rehabilitation work ,32 water bodies,Parangimalai Union
× RELATED நீர்நிலைகளில் உயிர் பலியை தடுக்க என்ன...