தலைமை அஞ்சலகத்தில் 29ம் தேதி குறைதீர் முகாம்

சென்னை: அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் வரும் 29ம் தேதி பயனாளிகள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலக அதிகாரி கனகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:அண்ணாசாலை தலைமை அஞ்சலகம் வாயிலாக தபால் சேவைகள் அதாவது மணியார்டர், பதிவு தபால், சேமிப்பு வங்கி முதலிய சேவைகளை பெற்றுவரும் பயனாளிகள், சேவைகளில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றை நேரிலோ, தபால் வாயிலாகவோ அல்லது மின்அஞ்சல் (doannaroadhpo.tn@indiapost.gov.in) வாயிலாகவோ வரும் 26ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ, தலைமை அஞ்சலக அதிகாரி, அண்ணாசாலை தலைமை அஞ்சலகம், சென்னை-600 002 என்ற முகவரிக்கு ‘குறைதீர்வு முகாம்’ என்ற தலைப்பில் அனுப்பி வைக்கலாம். மேலும், 29ம் தேதி மாலை 3 மணியளவில் அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும் குறைதீர் முகாமிலும் பயனாளிகள் நேரில் வந்தும் கலந்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Camp ,Post. , Overnight, Camp, Chief, Post
× RELATED மாற்றுத்திறனாளிகள் முகாம் ஒத்திவைப்பு