×

நலவாழ்வு மையங்களில் காய்ச்சலுக்கு சிறப்பு வார்டு: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை:  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகராட்சி மருத்துவ சேவைகள் துறையின் கீழ் 140 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களும், 15 நகர சமுதாய நல வாழ்வு மையங்களும், 24 மணி நேரம் செயல்படும் 3 மகப்பேறு மருத்துவமனைகளும் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி, சென்னை மாநகராட்சி, மருத்துவ சேவைகள் துறையின் கீழ் செயல்படும் வளசரவாக்கம் மண்டலம் சின்ன போரூர், மருத்துவமனை சாலை மற்றும் பெருங்குடி மண்டலம் கந்தன்சாவடி, ஸ்கூல் ரோட்டில் செயல்படும் 100 படுக்கை வசதிகள் கொண்ட 24 மணி நேரமும் செயல்படும் நகர்ப்புற சமுதாய நல வாழ்வு மையங்களில் டெங்கு காய்ச்சல், மலேரியா மற்றும் டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல்களினால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் அளிக்கும் வகையில், காய்ச்சலுக்காக சிறப்பு வார்டுகள் நாளை முதல் துவங்கப்பட உள்ளது.


Tags : Special Ward ,centers ,announcement , Special ward,influenza,welfare centers,Municipal announcement
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!