×

துணை முதல்வருக்கு எதிராக பேஸ்புக்கில் பதிவிட்டவர் மீது வழக்கு

பெரியகுளம்: பேஸ்புக்கில் கலவரத்தை தூண்டும் வகையில் துணைமுதல்வருக்கு எதிராக புகைப்படத்தை வெளியிட்டவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம், தென்கரை, 30வது வார்டு அதிமுக செயலாளர் ராஜாங்கம்(55). இவர் நேற்று முன்தினம் பேஸ்புக் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தென்கரை, தண்டுப்பாளையத்தை சேர்ந்த நூர்முகமது, ராஜாங்கத்தின் பேஸ்புக்கில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி மிரட்டி படத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தென்கரை போலீசில் ராஜாங்கம் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Deputy CM Deputy ,CM , Deputy CM, vs., Facebook, posted, case
× RELATED பக்தர்கள் கடும் எதிர்ப்பு எதிரொலி பாஜ...