தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிக்கு பூமிபூஜை

தூத்துக்குடி: தூத்துக்குடி வாகைக்குளத்தில் கடந்த 1993ம் ஆண்டு விமான நிலையம் திறக்கப்பட்டது. 2004ம் ஆண்டு ஏப்.1ம் தேதி முதல் தூத்துக்குடி விமான நிலையம் முழு வீச்சில் செயல்பட்டது. தற்போது சென்னைக்கு மட்டும் விமான சர்வீஸ் நடந்து வருகிறது. வருகிற 27ம் தேதி தீபாவளி முதல் தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு விமான போக்குவரத்து தொடங்குகிறது. இதற்கிடையே ரூ.153.15 கோடி செலவில் தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக 600.97 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று விமான நிலைய விரிவாக்கத்திற்கான பூமி பூஜை நடந்தது. விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன், இணை பொதுமேலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமைவகித்தனர். தூத்துக்குடி விமான நிலைய மேலாளர் ஜெயராமன் வரவேற்றார். நிகழ்ச்சியில் இந்திய விமான நிலையங்கள் ஆணைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ஸ்பைஜெட், இண்டிகோ, ஏர்லைன்ஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விரிவாக்கப் பணிகள் 2020ம் ஆண்டு ஜனவரிக்குள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>