×

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் அரசுமுறை பயணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு புறப்பட்டார். முதல் கட்டமாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  பிலிப்பைன்ஸ் அதிபரை சந்தித்த ராம்நாத் கோவிந்த் இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து இரு நாடுகளிடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதைத்தொடர்ந்து, இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 35 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோருடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துரையாடினார். அப்போது பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்புத் துறைகளிலும், தீவிரவாதத்துக்கு எதிராகவும் இணைந்து செயல்பட ஒப்புக்கொள்ளப்பட்டது. சில ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இந்நிலையில் தலைநகர் மணிலாவில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலையை திறந்து வைத்தார். பிலிப்பைன்ஸ் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு டோக்கியோ செல்ல இருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜப்பானின் புதிய மன்னரின் முடிசூட்டுவிழாவில் பங்கேற்கவுள்ளார்.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைக்கப்பட்டு உள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த இன்று காலை திறந்து வைத்தார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு மணிலாவில் காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, டோக்கியோவில் உள்ள புத்த கோவிலுக்கு செல்லும் ஜனாதிபதி அங்கு ஒரு போதி மரத்தையும் நட உள்ளார். பின்னர் தனது ஜப்பான் பயணத்தை அக்டோபர் 23-ம் தேதி முடித்துக்கொண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்தியா திரும்புகிறார் என தெரிவித்துள்ளது.

Tags : Ramnath Govind ,Philippines ,capital ,Mahatma Gandhi ,Manila. ,Manila , Philippines, Manila, statue of President Mahatma Gandhi, President Ramnath Govind
× RELATED பருவநிலை மாற்றம் காரணமாக பல மாநிலங்களில் சுட்டெரிக்கும் வெயில்