×

பள்ளி மாணவர்களுக்கு பார்கோடுடன் அடையாள அட்டை

தொண்டி: தொண்டி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு அனைத்து தகவலும் அடங்கிய கியூஆர் கோடு அடங்கிய அடையாள அட்டை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது பள்ளி கல்வி துறை சார்பில் பள்ளி கூடங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருசிறது. அதில் ஒன்று மாணவர்களுக்கு வழங்கும் அடையாள அட்டையாகும். மாணவர்களின் அனைத்து தகவலும் பதிவேற்றம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. நேற்று திருவாடானை வட்டாரத்தில் முதல் முறையாக தொண்டி கிழக்கு தொடக்கப் பள்ளியில் கியூஆர் காடு அடங்கிய அடையாள அட்டை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதுகுறித்த தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன் கூறியது, பள்ளி மாணவர்களின் முழு விபரம் அடங்கிய கியூஆர் கோடு அடங்கிய புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பார்கோடை ஸ்கேன் செய்தால் மாணவரின் பெயர் முகவரி, தாய், தந்தை பெயர், ரத்தம் குருப், படிக்கும் வகுப்பு, தந்தையின் தொழில், வருமானம் உள்ளிட்ட பல்வேறு வகையான தகவல்கள் கிடைக்கும். திருவாடானை வட்டாரத்தில் முதல் முறையாக இப்பள்ளியில் இந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இனி வரும் நாள்களில் அனைத்து பள்ளிகளிலும் வழங்கப்படும் என்றார்.

Tags : school children , School Student, Barcode with ID
× RELATED ரமலான் விடுமுறையில் இயங்கியது...