×

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் 100 அடியை எட்டியது பவானிசாகர் அணை: கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,300 கன அடி நீர் வெளியேற்றம்

ஈரோடு: தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 100 அடியை எட்டியுள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 11,148 கன அடியாகவும் நீர் இருப்பு 28.8 டி.எம்.சியாகவும் உள்ளது. பவானிசாகர் அணை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 105 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழை நீர் அணைக்கு வருகிறது.

பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால் மற்றும் கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் மாலை அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 689 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 96.63 அடியாக இருந்தது.

அணையில் இருந்து காலி்ங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
நேற்றும் அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரித்தது. நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 749 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டமும் சற்று அதிகரித்து 97.16அடியை தொட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 க னஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. அப்போது அணைக்கு நீர்வரத்து  11,148 கன அடியாக இருந்தது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Tags : dam ,Bawanisagar Dam , Waterway, Bhawanisagar Dam, discharge
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்