×

வக்கீலுக்கு கத்திக்குத்து

திருவொற்றியூர்: திருவொற்றியூர் சாத்தாங்காடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (30), வழக்கறிஞர். நேற்று முன்தினம் இவருக்கும், இவரது சகோதரர் விக்னேஷ் (27) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த விக்னேஷ், அண்ணனை கத்தியால் குத்தினார்.  படுகாயமடைந்த அவருக்கு மருத்துவ மனையில்  சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீசார், விக்னேஷை கைது செய்தனர்.


Tags : lawyer. ,lawyer , Shout out to the lawyer
× RELATED நீதிமன்றங்களை திறக்க வலியுறுத்தி...