×

ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: இன்று காலை 7 மணிக்கு இயக்கப்படும் மதுரை- சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கல்பட்டு வரை இயக்கப்படும். செங்கல்பட்டு- சென்னை எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதைபோன்று, சென்னை எழும்பூர்- மதுரை இடையே  இன்று  பிற்பகல் 1.40 மணிக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு இயக்கப்படும். மேலும், மாலை 3.20 மணிக்கு செங்கல்பட்டு- கச்சிகூடா வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று தாம்பரத்தில் இருந்து மாலை 3.50 மணிக்கு இயக்கப்படும்.

செங்கல்பட்டு- காக்கிநாடா சர்கார் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து மாலை 4 மணிக்கு இயக்கப்படும். மேல்மருவத்தூர்- விழுப்புரம் இடையே இன்று இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது. மேல்மருவத்தூர்- சென்னை கடற்கரை வரை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் தாம்பரம்- சென்னை கடற்கரை வரை இயக்கப்படும்.

Tags : Rail service, change
× RELATED மதுவுக்கு அடிமையாகி தடம் மாறும்...