பூர்விகா மொபைல்ஸ் ஷோரூம்களில் தீபாவளி சிறப்பு விற்பனை

சென்னை: மொபைல் ரீடெய்ல் விற்பனை நிறுவனமான பூர்விகா மொபைல்ஸ், ‘ஆனந்த தீபாவளி’ விற்பனை திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம், கார், பைக் மற்றும் ப்ளுடூத் ஹெட்செட் போன்ற பரிசுகளை பெறுவதற்கான வாசகம் எழுதும் போட்டியை பூர்வீகா அறிவித்துள்ளது. ₹8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலையுடைய சாம்சங் ஸ்மார்ட் போன்களை வாங்கும் யார் வேண்டுமானாலும் இந்த வாசக போட்டியில் பங்கேற்கலாம். அவ்வாறு பங்கேற்பவர்கள் ஒரு வாசகம் எழுதி பூர்விகாவிற்கு அனுப்ப வேண்டும். மேலும் ஒரு கவர்ச்சியான, தனித்துவம் மிக்க வாசகம் அனுப்பக்கூடிய வாடிக்கையாளர்களை தேர்வு செய்து பரிசு வழங்கப்படும். இந்த வாசகம் எழுதும் போட்டி அக்டோபர் 31ம் தேதி வரை நடைபெறும்.

இது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து பூர்விகா மொபைல்ஸ் விற்பனை மையங்களிலும் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட மொபைல்களுக்கு டவுன் பேமண்ட் ஆபர் மற்றும் 7.5 சதவீத கேஷ் பேக் வழங்கப்படுகிறது. சாம்சங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட மொபைல்களுக்கு ₹6 ஆயிரம் வரை கேஷ் பேக் பெறலாம். ஒரு காம்போ ஆபராக ₹1,499 என்ற விலையில் 2  பேசிக் மொபைல் வாங்கலாம். பிரைமரி கேமரா மொபைல் ₹699 என்ற விலையில் தொடங்குகிறது. 60 சதவீதம் வரை தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் ஆபர் மற்றும் பரிசு வவுச்சர்களும் வழங்கப்படுகிறது. 

Related Stories: