×

முருகன்-நளினி சந்திப்பு நிறுத்தம்?

வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் ஆன்ட்ராய்ட் செல்போனை நேற்று முன்தினம் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பெண்கள் சிறையில் உள்ள அவரது மனைவி நளினியுடன் 15 நாளுக்கு ஒருமுறை முருகன் சந்தித்து பேசுவது, உறவினர் சந்திப்பு, கடிதப்போக்குவரத்து உள்ளிட்ட சலுகைகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், முருகனிடம் ஏற்கனவே 2017ல்  செல்போன் பறிமுதல் செய்யப்பட்டபோது, அவருக்கு சிறையில் வழங்கப்பட்ட சலுகைகள் 3 மாதங்களுக்கு நிறுத்தப்பட்டது. எனவே இப்போதும் சலுகைகள் ரத்தாகும் என்றனர்.


Tags : junction ,Murugan-Nalini , Murugan-Nalini meet, stop?
× RELATED நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக சந்திப்பில் மீண்டும் சிக்னல் திறப்பு