×

மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

மேட்டூர்: கர்நாடக அணைகளில் நீர்திறப்பு காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, நேற்று முன்தினம் 34,722 கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை அது 27,985 கனஅடியாக சரிந்தது. அணையில்  இருந்து, டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியும், கிழக்கு,  மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கனஅடியும்  திறக்கப்பட்டு வருகிறது. திறப்பை விட வரத்து அதிகரித்துள்ளதால்,  நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் 114.83 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 116.27 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 87.64 டிஎம்சி. அதேபோல், நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக இருந்தது. நேற்று காலை 17 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. எனினும் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் சவாரிக்கும் தடை நீடிக்கிறது.

Tags : Mettur Dam , Mettur Dam, water level rise
× RELATED மேட்டுர் அணையின் நீர்வரத்து 7,013 கன அடியிலிருந்து 6,976 கன அடியாக குறைவு