காந்தி பிறந்தநாள் பொறுப்பாளர் நியமித்தது பாஜ

சென்னை:தமிழக பாஜக அமைப்பு பொது செயலாளர் கேசவவிநாயகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் காந்தி சங்கல்ப பாதயாத்திரை நடைபெற்று வருகின்றது. யாத்திரையின் நிறைவு விழாவானது அக்டோபார் 31ம் தேதி நடைபெற உள்ளது. அக்டோபர் 31ம் தேதி அன்று நடைபெற உள்ள முப்பெரும் விழாவிற்கு மாநில பொறுப்பாளராக கட்சியின் மாநில துணை தலைவர் எம்.என்.ராஜா நியமிக்கப்படுகிறார்.

அதனோடு கோட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி கோட்டத்துக்கு-சி.தர்மராஜ், மதுரை-பேராசிரியர் ஆர்.சீனிவாசன், ராமேஸ்வரம்-கே.சண்முகராஜ், தஞ்சாவூர்-டி.வரதராஜன், திருச்சி-டாக்டர் எம்.சிவசுப்ரமணியம், சிதம்பரம்-ஜெ.சுகுமாரன், காஞ்சிபுரம்-பி.பாஸ்கர், சென்னை- வி.காளிதாஸ், வேலூர்-ஆர்.பிரகாஷ், கிருஷ்ணகிரி-ஜி.பாலகிருஷ்ணன்,சேலம்-என்.அண்ணாதுரை, ஈரோடு- வி.வைரவேலு, கோவை ஆர்.கல்யாணசுந்தரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Baja ,Gandhi ,birthday caretaker , Gandhi's Birthday, Bjp
× RELATED பாஜ உருவாக்குவதில் அல்ல விற்பதில்...