×

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 5 ஆயிரம் தற்காலிக பணியாளர்கள்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு துறைகளில் சேர்ந்த 5 ஆயிரம் தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், மாநகராட்சி துணை ஆணையர்கள் கோவிந்த ராவ், குமாரவேல்பாண்டியன், காவல்துறை கூடுதல் ஆணையர்கள் தினகரன், பிரேம் ஆனந்த் சின்ஹா, காவல்துறை இணை ஆணையர்கள் சுதாகர், உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், ‘‘சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் அதிகம் தண்ணீர் தேங்கும் இடங்கள், வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மின்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 15 துறை அதிகாரிகளுடன் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான தற்காலிக பணியாளர்களை நியமித்து வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் பேரிடர்களை சமாளிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் பிரச்னைகளை தெரிவிக்க 1913 என்ற இலவச தொலைபேசி எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்றார்.

போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறுகையில், “அனைத்து மண்டலங்களிலும் மண்டல அதிகாரி மூலமாக ஒரு ஆய்வு கூட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக தகவல்கள் பரிமாறப்பட்டு பிரச்னைகளை தீர்ப்பதற்கு காவல்துறையினர் உதவி செய்ய இருக்கிறோம்” என்றார்.

Tags : Prakash ,Municipal Commissioner ,Prakash 5000 Temporary Workers , Northeast Monsoon, Temporary Staff, Corporation Commissioner Prakash
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...