×

கபாலீஸ்வரர் கோயிலுக்குரிய திருமண மண்டபத்தின் ஒரு நாள் வாடகை ரூ.8 லட்சமாக குறைப்பு: அறநிலையத்துறை நடவடிக்கை

சென்னை: கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக ₹16 கோடி செலவில் கட்டப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபத்தின் ஒரு நாள் வாடகை ₹10 லட்சத்தில் இருந்து ₹8 லட்சமாக குறைத்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.ராஜா அண்ணாமலைபுரத்தில் பசுமைவழிச்சாலையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நவீன வசதிகளுடன் கூடிய புதிய திருமணம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கடந்த 2011ல் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2013ல் கட்டுமான பணிகளை தொடங்கியது. இந்த மண்டபம் 68,272 சதுர அடி பரப்பளவில் ₹16.75 கோடி செலவில் அதிநவீன வசதிகள் உடன் கூடிய திருமண மண்டபத்தின் கட்டுமான பணிகள் முழுவதுமாக கடந்த நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்த மண்டலத்தின், முதல் தளத்தில் 11 ஆயிரம் சதுர அடியில் 1000 நபர்கள் அமர்ந்து திருமண நிகழ்ச்சியைக் காணக்கூடிய வகையில் நிகழ்ச்சிக்கான கூடம் அமைக்கப்பட்டுள்ளது. 1927 சதுர அடி பரப்பளவில் முக்கிய பிரமுகர்கள் உணவு அருந்த 80 இருக்கைகள் கொண்டதாகவும், 10,722 சதுர அடி பரப்பளவில் தரைத் தளத்தில் 475 இருக்கைகள் கொண்ட உணவு அருந்தும் கூடமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் நிறுத்திடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மணமகன், மணமகள் அறைகளைத் தவிர 12 தங்குமிட அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் மற்றும் கழிவுநீர் செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் ஜெனரேட்டர், கண்காணிப்புக் காமிரா வசதி, தீயணைப்பு கருவிகள் ஆகியவற்றுடன் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த திருமண மண்டபம் ஒரு நாள் வாடகை ₹10 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த கட்டணம் அதிகமாக இருப்பதால், அவற்றை குறைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதையேற்று ₹10 லட்சத்து 3 ஆயிரத்தில் இருந்து ₹8 லட்சத்து 85 ஆயிரமாக வாடகையை குறைத்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. திருமண மண்டப ஒரு நாள் வாடகை ₹10 லட்சம் என்பது அதிகம். இதை குறைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதையேற்று இப்போது  வாடகையை ₹8 லட்சத்து 85 ஆயிரமாக குறைத்துள்ளனர்.

Tags : wedding hall ,Kapaleeswarar temple Reduction ,Kapaleeswarar temple , Reduction ,Rs 8 lakh per day , wedding hall,Kapaleeswarar,temple
× RELATED மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இன்று பங்குனி தேரோட்டம்