×

ரஷ்யாவில் படிப்புக்காக அனுப்பிய ₹7 லட்சம் மோசடி தந்தை, மகன் மீது வழக்கு பதிய கோரி மனு: போலீசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: ரஷ்யாவில் மகன் எம்பிபிஎஸ் படிப்புக்காக அனுப்பிய ₹7 லட்சத்தை மோசடி செய்த தந்தை, மகன் மீது வழக்கு பதியக்கோரிய மனுவுக்கு விழுப்புரம் போலீஸ் பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திண்டிவனத்தை சேர்ந்தவர் பழனி. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது மகன் அருண் பிரசாத். மருத்துவம் படிக்க விரும்பினார். இதையடுத்து, ரஷ்யாவில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் 4ம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் பரகத் என்பவர் அருண்பிரசாத்துக்கு ரஷ்யாவில் சீட் வாங்கித் தருவதாக கூறினார். அதன்படி பரகத் மூலம் மருத்துவ கல்லூரியில் எனது மகன் கடந்த 2010ல்  சேர்ந்தான். அருண் பிரசாத்துக்கான அனைத்து கல்வி கட்டணத்தையும் பரகத்துக்கு அனுப்பினேன்.

இந்நிலையில், எனது நிலத்தை அடமானம் வைத்து கடந்த ஆண்டுக்கான கல்வி கட்டணம் ₹7 லட்சத்தை பரகத்துக்கு அனுப்பினேன்.  இந்நிலையில் எனது மகன் அருண் பிரசாத் 4ம் ஆண்டுக்கான கட்டணத்தை செலுத்தவில்லை எனக்கூறி அவனை கல்லூரியில் இருந்து நீக்கி விட்டார்கள். விசாரித்ததில் நான் அனுப்பிய பணத்தை பரகத் மற்றும் அவரது தந்தை வாங்கிக்கொண்டு எனது மகனுக்கான கல்வி கட்டணத்தை கட்டாமல் ஏமாற்றி விட்டார்கள். அவர்களிடம் பணத்தை கேட்டபோது என்னையும் எனது மகனையும் மிரட்டினார்கள். எனது பணத்தை திரும்ப வாங்கித் தர வேண்டும் என்றும், எனது மகன் படிப்புக்கான பணத்தை மோசடி செய்த பரகத் அவரது தந்தை ஜான் பாஷா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக்கோரி விழுப்புரம் போலீசில் புகார் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எனது புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு விழுப்புரம் போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சீனிவாசன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் விழுப்புரம் எஸ்பி திங்கள்கிழமை பதில் தருமாறு உத்தரவிட்டார்.

Tags : High Court ,fraudster ,Russia ,petitioner , High Court ,police, petitioner sues father, son of ,7 lakh fraudster,Russia
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...