×

தென்னிந்திய தற்காப்பு கலை போட்டி விவேகானந்தா பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்தென்னிந்திய தற்காப்பு கலை போட்டி: விவேகானந்தா பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி வினா யோகா பயிற்சி மையம், டி.ஜெ.எஸ் கல்விக் குழுமம், இந்திய நியூ மாங்க்ஸ் குங்க்பூ பயிற்சி மையம், இந்திய பாரம்பரிய கராத்தே  கோபுடோ அமைப்பு, ஜெய்ஹிந்த் சிலம்பக்கூடம் இணைந்து  தென்னிந்திய அளவிலான 2வது தற்காப்பு கலை, யோகா போட்டிகளை கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் நடத்தின. போட்டிகளை டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார்.

தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் அதிக போட்டிகளில் வென்ற கும்மிடிப்பூண்டி துராப்பள்ளம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. யோகா போட்டியில், சாம்பியன் ஆப் தி சாம்பியன் பட்டத்தை டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த சூரஜ்குமார் குன்டு, பெண்களுக்கான பிரிவில் காஞ்சிபுரத்தை சேர்ந்த லோகவர்ஷினி கைப்பற்றினர். தவிர குங்க்பூவில் தேவா தர்மா,  சுகன் ஆகியோர் சாம்பியன் ஆப் தி சாம்பியன் பட்டம் பெற்றனர்.Tags : South Indian Martial Arts Competition Vivekananda School Overall Champion ,Vivekananda School Overall Champion. South Indian Martial Arts Competition Vivekananda School Overall Champion , South Indian Martial Arts,Competition Vivekananda School , South Indian Martial Arts Competition, Vivekananda School Overall Champion
× RELATED இரட்டை சதம் விளாசினார் வில்லியம்சன்: நியூசிலாந்து 519/7 டிக்ளேர்