இரட்டை வண்ணத்தேர்வில் ஹூண்டாய் வெனியூ

ஹூண்டாய் வெனியூ கார் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக மாறி இருக்கிறது. கிரெட்டா போலவே டிசைன் அம்சங்கள், தொழில்நுட்ப வசதிகள், சரியான விலை போன்றவை இந்த காருக்கு அதிக வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது. இந்த நிலையில், ஹூண்டாய் வெனியூ கார் குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு டாப் வேரியண்ட்டுகளில் இரட்டை வண்ணத்தேர்வு வழங்குவதற்கு ஹூண்டாய் முடிவு செய்துள்ளது. தற்போது 1.0 லிட்டர் பெட்ரோல் அல்லது 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் மாடல்களில் எஸ்எக்ஸ் என்ற வேரியண்ட்டில் மட்டுமே இரட்டை வண்ணத்தேர்வு வழங்கப்படுகிறது.இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், எஸ்எக்ஸ் ஆப்ஷனல் மற்றும் எஸ்எக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டுகளிலும் இரட்டை வண்ணத்தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதன் மூலமாக, அதிக விலை கொடுத்து டாப் வேரியண்ட்டை வாங்கும் வாடிக்கையாளர்கள் கூடுதல் மதிப்பை பெறும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும், இந்த வண்ணத்தேர்வுக்காக ₹15,000 முதல் ₹20,000 வரை கூடுதல் விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது.இந்த காரின் 1.0 லிட்டர் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட எஸ்எக்ஸ் ஆப்ஷனல் வேரியண்ட்டானது ₹10.75 லட்சத்திலும், 1.0 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடலின் எஸ்எக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டானது ₹11.25 லட்சத்திலும் கிடைக்கிறது. அதேபோன்று, 1.4 லிட்டர் டீசல் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட எஸ்எக்ஸ் ஆப்ஷனல் வேரியண்ட் ₹10.99 லட்சத்தில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று வேரியண்ட்டுகளிலும் தான் டியூவல் டோன் ஆப்ஷன் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>