×

கோட்டயத்தில் அபயா கொலை வழக்கு; கன்னித்தன்மை இருப்பதாக காட்டிக்கொள்ள கன்னியாஸ்திரி அறுவை சிகிச்சை...அம்பலப்படுத்தினார் அரசு டாக்டர்

திருவனந்தபுரம்: கோட்டயத்தில் கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 2 பாதிரியார்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மற்றொரு கன்னியாஸ்திரி செபி, தான் கன்னித்தன்மையுடன் இருப்பதாக காட்டிக்கொள்ள அறுவை  சிகிச்சை செய்து கொண்டது அம்பலமாகி உள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் அபயா. கன்னியாஸ்திரியான இவர் கோட்டயத்தில் உள்ள செயின்ட் பயஸ் கான்வென்டில் தங்கியிருந்தார். கடந்த 1992ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி  (அப்போது அபயாவுக்கு வயது 19) அங்குள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து முதலில் கோட்டயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் அபயா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் அபயா கொலை செய்யப்பட்டதாகவும், இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அபயாவின் பெற்றோரும், சில சமூக நல  அமைப்புகளும் வலியுறுத்தி போராட்டம் நடந்தன. இதையடுத்து இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. ஆனால் குற்றப்பிரிவு போலீசாரும் அபயா தற்கொலை செய்து கொண்டதாகவே கூறினர்.

இதையடுத்து அபயா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க நடவடிக்கை எடுக்க கோரி மனித உரிமை ஆர்வலரான ஜோமோன் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் சிபிஐ நடத்திய விசாரணையிலும் அபயா தற்கொலை செய்து கொண்டதாகவே தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து வேறு சிபிஐ குழுவை நியமிக்க வேண்டும் என  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சென்னையை சேர்ந்த சிபிஐ குழு விசாரணையில் இறங்கியது. இந்த விசாரணையில்தான் அபயா தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும்  தெரியவந்தது.

ஆனால் கொலையாளிகளை தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என உயர்நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து சிபிஐயை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம் வேறு புதிய குழுவை அமைத்து விசாரிக்க  உத்தரவிட்டது. இந்த 3வது சிபிஐ குழுவினர் நடத்திய விசாரணையில், கன்னியாஸ்திரி அபயாவை கொலை செய்த சம்பவத்தில்  பாதிரியார்களான தாமஸ் ேகாட்டூர், ஜோஸ் புத்ருக்கயில், கன்னியாஸ்திரி செபி ஆகிய 3 பேரையும் கைது  செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் சிபிஐ ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் கன்னியாஸ்திரி செபியுடன்  பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில் ஆகியோர் தகாத உறவு  வைத்திருந்தனர் எனவும், சம்பவத்தன்று இதை கன்னியாஸ்திரி அபயா பார்த்து விட்டதால் வெளியே சொல்லி விடுவாரோ என பயந்து, அவர்கள் 3 பேரும் சேர்ந்து கொலை செய்து கிணற்றில் வீசியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகிய 3 பேரும் கடந்த 2008 நவம்பரில் கைது செய்யப்பட்டனர். 2009 ஜனவரியில் 3 பேருக்கும்  ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தங்களை இந்த  வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் 3 பேரும் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் பாதிரியார் ஜோஸ் புத்ருக்கயிலை மட்டும் வழக்கில்  இருந்து விடுவித்தது. ஆனால் மற்ற 2 பேர் மீதும் விசாரணையை தொடர உத்தரவிட்டது.

இந்த நிலையில் கொலை நடந்து 27 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை  நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் அபயாவின் கல்லூரி பேராசிரியையான திரேசியாம்மா நீதிமன்றத்தில் கூறும்போது, 2 பாதிரியார்களும், மடத்தில் உள்ள கன்னியாஸ்திரிகள் சிலரிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக பலமுறை  என்னிடம் கூறியுள்ளனர். இந்த வழக்கில் நான் சாட்சி சொல்லக்கூடாது என எனக்கு மிரட்டல்களும் வந்தன என தெரிவித்திருந்தார். அதுபோல மடத்தின் அருகில் வசிக்கும் ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியளித்தபோது, 2 பாதிரியார்களும் அடிக்கடி  இரவு நேரங்களில் சுவர் ஏறி குதித்து கன்னியாஸ்திரி மடத்துக்குள் செல்வதை பார்த்ததாகவும் கூறினார்.

இந்த நிலையில் நேற்றும் இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது கன்னியாஸ்திரி செபி கைது செய்யப்பட்டபோது அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்த ஆலப்புழா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மகப்பேறு பிரிவு தலைவர்  லலிதாம்பிகா சாட்சியம் அளித்தார். அப்போது அவர் கூறியது: கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி கன்னியாஸ்திரி செபியை மருத்துவ பரிசோதனைக்காக சிபிஐ அதிகாரிகள் என்னிடம் அழைத்து வந்தனர். செபிக்கு நான்தான் மருத்துவ  பரிசோதனை செய்தேன். இதில் கன்னியாஸ்திரி செபி கன்னித்தன்மையுடன் இருப்பதாக காட்டிக்கொள்ள அவரது பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதை நான் கண்டுபிடித்தேன். இது தொடர்பாக சிபிஐக்கு நான் அறிக்கை தாக்கல்  செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த சம்பவம் ேகரளாவில் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

Tags : Abaya ,Kottayam ,Nun , Abaya murder case in Kottayam; Nun surgery to expose virginity ...
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு வந்த பெண்...