×

காப்பி அடிப்பதை தடுக்க தலையில் அட்டைப் பெட்டி முக்காடு: எப்டியெல்லாம் யோசிக்கிறாங்கபா...

பெங்களூரு: கர்நாடகா கல்லூரியில் தேர்வு எழுதுவதில் காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டை பெட்டியை மாட்டிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பள்ளி, கல்லூரிகளில் காலம் காலமாகவே ஆசியர்களுக்கு இருக்கும் பேரும் பிரச்னைகளில் ஒன்று தேர்வின் போது மாணவர்கள் காப்பி அடிப்பதை எப்படித் தடுப்பது என தீவிரமாக யோசித்து வருவதுதான். இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள  ஒரு தனியார் கல்லூரி, மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க ஒரு புதிய தனித்துவமான நுட்பத்தை தேர்வுத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க, தலையில் அட்டைப்பெட்டியை  மாட்டிவிட்டு தேர்வு எழுதும் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

ஹவேரி மாவட்டத்தில் உள்ள தனியார் பல்கலை ஒன்றில் நடக்கும் செமஸ்டர் தேர்வில், முறைகேடுகளை தடுக்கவும், மாணவர்கள் காப்பி அடிக்காமல் இருக்கவும் மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியை மாட்டிவிட்டு தேர்வு எழுத  வைத்துள்ளதாக, அந்த வீடியோவில் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவை மாணவர் ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.  அந்த புகைப்படம் வைரலாக பரவியது. இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு மாநில அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மீண்டும் இவ்வாறு நடந்தால் கல்லூரி உரிமம் ரத்து செய்யப்படும் எனவும்  எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தின் கல்லூரியில் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டதால், அம்மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Coffee head cover to prevent coffee breaks:
× RELATED காந்தி நகரில் போட்டியிடும் அமித்...