அரியானா சட்டமன்ற தேர்தல்: பாஜக-விற்கு தமிழ்ச்சங்க நிர்வாகிகள் ஆதரவு

அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரை சந்தித்து அரியானா தமிழ்ச்சங்க நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்- ஐ சந்தித்து, அரியானா தமிழ் சங்க நிர்வாகிகள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். குருகிராம் மற்றும் சண்டிகர் தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் தமிழர்கள் சார்பாக தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டனர்.

அப்போது, அரியானாவில் வாழும் தமிழர்களுக்கு உள்ள அடிப்படை பிரச்சினைகள் மற்றும் பஞ்ச்குலா பகுதியில் வாழும் தமிழர்களுக்கு மனைப் பட்டா பெறுவதில் உள்ள சிக்கல் போன்றவற்றை தீர்க்க வேண்டுமென முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை மனு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளதாகவும் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். அரியானா மாநிலத்தில் சுமார் 80 ஆயிரம் தமிழர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>