நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இதுவரை ரூ.1.2 கோடி பறிமுதல்: சத்யபிரதா சாகு தகவல்

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இதுவரை ரூ. 1.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நடக்கும் 2 தொகுதிகளில் தேர்தல் பார்வையாளர்கள் இன்று முதல் பணியில் ஈடுபடுவர். சீமான் சர்ச்சை பேச்சு குறித்த அறிக்கை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும் என்று சத்யபிரதா சாகு தெரிவித்தார். மேலும் தேர்தலை சுமூகமாக நடத்த ஆட்சியர்கள், தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


Tags : constituencies ,Vikravandi ,Satyaprata Sahu ,Satyaprata Sahu Nankuneri , Nanguneri, Vikravandi block, Rs .1.2 billion, seizure, catyapirata Sahu
× RELATED விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளை...