×

மாமல்லபுரத்தில் வெண்ணை உருண்டை பாறையை பார்வையிட இனி கட்டணம் வசூலிக்கப்படும்: தொல்லியல்துறை

சென்னை: மாமல்லபுரத்தில் புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதுவரை வெண்ணை உருண்டை பாறையை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்த நிலையில், இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. வெண்ணை உருண்டை பாறையை பார்வையிட இந்தியர்களுக்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.600 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தொல்லியல்துறை அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகியவற்றை பார்வையிட ரூ.40 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தளங்களில் ஒன்றாக மாமல்லபுரம் திகழ்ந்து வருகிறது. இங்கு கடந்த 11, 21ம் தேதிகளில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நடந்தது. இதனையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் அழகுபடுத்தப்பட்டன. மேலும் மாமல்லபுரமே மின்னொளியில் ஜொலித்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக புராதன சின்னங்களை பொதுமக்கள் கண்டுகளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு நிறைவடைந்ததையடுத்து புராதன சின்னங்களை பொதுமக்கள் கண்டுகளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதையடுத்து, ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேலான சுற்றுலாப்பயணிகள் மாமல்லபுரத்திற்கு படையெடுத்தனர்.

தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் அதிகமாக வருகை தருகின்றனர். மேலும் மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில், 5 ரதம் உள்ளிட்ட பகுதிகளில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது, வெண்ணை உருண்டை பாறையை பார்வையிட கட்டணம் வசூலப்படும் என தொல்லியல்துறை அறிவித்துள்ளது. அதில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 40 ரூபாயும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு 600 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய கட்டண முறை இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Mamallapuram ,Archeology. , Mamallapuram, charges, collections, avocado rock, archeology
× RELATED மாமல்லபுரத்தில் பரபரப்பு சிற்ப கல்லூரி வளாகத்தில் தீ