×

வடகிழக்கு பருவமழை 25 ஆண்டுக்கு பின் வரகையாறு, முள்ளியாற்றில் வெள்ளப்பெருக்கு

மேட்டுப்பாளையம் : வடகிழக்கு பருவமழைக்கு கோவை அடுத்த உள்ள வரகையாறு, முள்ளியாற்றில் 25 ஆண்டுக்கு பின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு பவானி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான அட்டப்பாடியில் மேற்கு தொடர்ச்சி, தெற்கு சரிவு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு பெய்யத் துவங்கியுள்ளதால் பவானி ஆற்றின் கிளை ஆறுகளான வரகையாறு, முள்ளியாறு பெரும்பள்ளம், கொடுங்கரைபள்ளத்தில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பில்லூர் அணை நிரம்பியது.

 பருவமழை காலங்களில் கடந்த 25 ஆண்டு காலமாக அப்பர் பவானி சைலன்ட் வேலி, வெள்ளிங்கிரி மலைத்தொடர் பகுதிகளில் மட்டுமே மழை பெய்து வந்தது. இதனால் கிழக்கு அட்டப்பாடி பகுதியில் கடுமையான வறட்சி காணப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவக்கத்திலேயே கிழக்கு அட்டப்பாடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நல்ல மழை பெய்யத் துவங்கியுள்ளது. இது அப்பகுதி விவசாயிகள், பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : floods ,Mulliyaru , Heavy floods ,varagaiyaru ,Mulliyaru ,mettupalayam,Northeast Monsoon
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி