×

பெங்களூரு தொழிலதிபர் வீட்டில் கொள்ளை விவகாரம்: முருகனின் கூட்டளிகள் 2 பேரை கைது செய்தது பெங்களூரு போலீஸ்

மதுரை: பெங்களூரு தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் கொள்ளையன் முருகன் கூட்டாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த கோபால், கணேசன் ஆகியோரை பெங்களூரு தனிப்படை போலீசார் கைது செய்தனர். கச்சைக்கட்டி கிராமத்துக்கு வந்த பெங்களூரு தனிப்படை போலீஸ் 2 பேரையும் அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட முருகன் கூட்டாளிகள் இருவரிடமும் பெங்களூரு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி லலிதா ஜுவல்லரி நகை கடை கொள்ளையில் மூளையாக செயல்பட்ட கொள்ளையன் முருகன் பெங்களூரு போலீஸ் பிடியில் உள்ளான்.

பொண்மனகெல்லி காவல் நிலையத்திற்கு உள்பட்ட வட்டாரத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் முருகனை 2வது முறையாக காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 11ம் தேதி காவலில் எடுக்கப்பட்ட முருகனை தமிழகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னைக்கு அழைத்து வரப்பட்ட முருகனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த 11 கிலோ தங்க நகைகளை பெங்களூரு போலீசார் மீட்டனர். அதேபோல், கொள்ளை சம்பவத்தில் உதவ காவல்துறை அதிகாரி ஒருவருக்கு லஞ்சம் கொடுத்தாதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. மேலும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளையடித்ததாக முருகன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்திருந்தான்.

சென்னையில் சுமார் 60 இடங்களில் கொள்ளை அடித்ததாகவும் தெரியவந்துள்ளது. அதில், பஞ்சாபி நேஷனல் வங்கி கொள்ளையும் அடங்கும். இது தொடர்பாக மதுரை வாடிபட்டியில் கைது செய்யப்பட்ட கணேசனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், வங்கி கொள்ளையில் ஈடுபட்ட போது பயன்படுத்திய வேன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 470 சவரன் நகையை உருக்கி விட்டதாகவும் அவன் வாக்குமூலம் அளித்துள்ளான். இந்த நிலையில், பெங்களுருவில் கொள்ளையடித்த நகைகளை தமிழகத்தில் உள்ள தமது கூட்டாளிகளிடம் கொடுத்து அதனை உருக்கி விற்றுவிட்டதாக முருகன் தெரிவித்திருந்தான். அதனடிப்படையில், தற்போது முருகனின் கூட்டாளிகள் இருவரை பெங்களூரு தனிப்படை போலீசார் மதுரையில் கைது செய்துள்ளனர்.

Tags : businessman ,home robbery ,Bengaluru ,Murugan , Bengaluru, businessman, house, robbery, Murugan, associates, arrest, Bangalore police, Madurai
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்