மருத்துவப் படிப்பில் மேலும் ஒரு மோசடி : 41 மாணவர்கள் கூட்டாக தேர்வில் காப்பியடித்தது அம்பலம் ; 2 மருத்துவ கல்லூரிகளின் தேர்வு மைய அங்கீகாரம் ரத்து

சென்னை : நீட் ஆள்மாறாட்ட மோசடியால் பரபரப்பு அடங்குவதற்குள் மருத்துவப் படிப்புக்கான தேர்வை 41 மாணவர்கள் கூட்டாக பார்த்து எழுதி மோசடி செய்தது அம்பலம் ஆகியுள்ளது. சென்னை பூந்தமல்லி அருகே செயல்படும் மாதா மருத்துவக் கல்லூரியில் நடத்தப்படும் தேர்வில் முறைகேடு நடப்பதாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு புகார் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்வு தொடர்பான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்ததில் மாதாகல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 3ம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் தேர்வில் கூட்டாக காப்பி அடித்தது தெரியவந்தது.

சிசிடிவி காட்சிகள் மூலம் முறைகேடு உறுதியானதால் 41 மாணவர்கள் எழுதிய தேர்வும் செல்லாது என்று எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 41 மாணவர்களும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாதா மருத்துவக் கல்லூரிக்கான தேர்வு மைய அங்கீகாரமும் 3 ஆண்டுகளுக்கு ரத்து செய்யபப்ட்டுள்ளது. இதேபோல் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் காப்பியடிக்க தேர்வு மைய கண்காணிப்பாளரே உதவியது தெரியவந்துள்ளது.  இதையடுத்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியின் தேர்வு மைய அங்கீகாரமும் 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.     


Tags : Cancellation , Students, Mata Medical College, Coffee, Recognition, Melmaruvathoor, Adiparasakthi, Cancellation
× RELATED கரூர் பள்ளியில் மயங்கி விழுந்து...