×

14417 என்ற இலவச உதவி எண்ணுக்கு வரக்கூடிய அழைப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க பள்ளிகல்வித்துறை ஆணை

சென்னை: 14417 என்ற பள்ளிக்கல்வித்துறையின் இலவச உதவி எண்ணுக்கு வரக்கூடிய அழைப்புகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 14417 எண்ணுக்கு வரக்கூடிய அழைப்புகள் மீது தனிக்கவனம் செலுத்தி, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது. 14417 எண்ணுக்கு வரக்கூடிய அழைப்புகளில் சந்தேகம், ஆலோசனை குறித்த தீர்வுகளை இலவச உதவி மைய பணியாளர்களே வழங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புகார்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு இணையதளம் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

Tags : School Department Order ,Helpline. ,school department , 14417, free help number, call, action, school order
× RELATED விலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை: மாவட்ட வன அலுவலர் பேட்டி