×

சின்மயானந்தா மீது பலாத்கார புகார் கூறிய சட்டக் கல்லூரி மாணவி எம்எல் படிக்க அனுமதி

ஷாஜகான்பூர்:  முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய சட்ட மாணவி, மேற்படிப்பில் சேருவதற்காக நேற்று விண்ணப்பம்  செய்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜ மூத்த தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்தாவுக்கு சொந்தமான சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவி, சின்மயானந்தா தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சின்மயானந்தாவை கைது ெசய்து சிறையில் அடைத்தனர். இதேபோல், அவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் சட்ட மாணவியையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், பெரெய்லியில் உள்ள சட்டக் கல்லூரியில் எம்எல் சட்ட மேற்படிப்பில் சேருவதற்கான மாணவியின் விண்ணப்பம், நேற்று முன்தினம் தலைமை நீதிபதி ஓம்வீர் சிங் முன்னிலையில் சமர்பிக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மாணவியை கல்லூரியில் சேர்ப்பதற்கு நீதிபதி அனுமதி அளித்தார். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, போலீஸ் காவலுடன் பெரெய்லி சட்ட கல்லூரிக்கு மாணவி அழைத்து செல்லப்பட்டார். அங்கு கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பத்தை மாணவி வழங்கினார். மேலும், இந்த படிப்புக்கான கல்விக் கட்டணங்களையும் செலுத்தினார்.

Tags : student ,Law College ,Chinmayantha ,ML. Law College , Chinmayananda, Balakaram, College student, ML
× RELATED நண்பர்களுடன் மீன் பிடித்தபோது கால்வாயில் தவறி விழுந்த மாணவன் பரிதாப பலி