×

கடலோரம் வழியாக கர்நாடகாவில் ஊடுருவல் பெங்களூரு, மைசூருவில் தாக்குதல் வங்கதேச தீவிரவாதிகள் சதி திட்டம்: உள்துறை அமைச்சர் பரபரப்பு தகவல்

மைசூரு: கர்நாடகாவில் தாக்குதல் நடத்த, பெங்களூரு,  மைசூருவில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக  திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று அளி்தத பேட்டி: கர்நாடகவில்  பாதுகாப்பு விவகாரத்தில் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு  வருகின்றனர். எனவே, மாநிலத்தில் எக்காரணம் கொண்டும் அசம்பாவித சம்பவங்கள்  நடக்க அரசு அனுமதிக்காது. வங்கதேசத்தை சேர்ந்த தீவிரவாத அமைப்புகளை  சேர்ந்தவர்கள் கடலோர மாவட்டங்கள் மூலமாக கர்நாடகாவுக்குள் நுழைந்திருப்பதாக  தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் பெங்களூரு, மைசூரு, மற்றும் கடலோர  மாவட்டங்களில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.  இதனால் போலீசார் தீவிரவாதிகளை கண்டறியும் பணியில் இரவு பகல் என பாராமல் தேடுதல்  பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் வசிக்கும் இடங்களில் தீவிரவாதிகள்  சாதாரண மக்களை போல் தங்கியுள்ளனர். வங்கதேசத்தை சேர்ந்தவர்களில்  தீவிரவாதிகள் கலந்துள்ளனரா  என்ற கோணத்திலும் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சந்தேகம்  எழும் வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள் குறித்து பொதுமக்கள்  போலீசாருக்கு தகவல் கொடுக்கவேண்டும்.  கர்நாடகாவில் நுழைந்துள்ள தீவிரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கும்  நடவடிக்கையில் கர்நாடக போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன்  முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.  தீவிரவாதிகளை  கண்காணிக்கவும், அவர்களை கண்டறிந்து கைது செய்யவும் தனிப்படை  அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில்  ஈடுபட்டுள்ளனர் என்றார்.



Tags : Bengaluru ,Karnataka ,Assassination ,extremists , Coast, Karnataka, Bengaluru, Mysore, Bangladesh extremists, Home Minister
× RELATED கர்நாடகாவில் சோகம்!: டிப்பர் லாரி...