×

குடிநீர் வாரிய பணிமனை அலுவலகம் இடமாற்றம்

சென்னை,: குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சென்னை குடிநீர் வாரியம், பகுதி அலுவலகம் 6க்கு உட்பட்ட உதவி பொறியாளர் அலுவலகம், பணிமனை 69, தற்போது பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை என்ற முகவரியில் இயங்கி வருகிறது. இனி இந்த பணிமனை அலுவலகம்  வரும் 24ம் தேதி முதல் கதவு எண்.5, ஆன்டர்சன் சாலை, அயனாவரம், சென்னை 600023 என்ற முகவரியில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தில்  செயல்படும்.
 பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் சம்பந்தப்பட்ட புகார்கள் மற்றும் குடிநீர் வரி மற்றும் கட்டணம் செலுத்தவும்  இந்த அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும்,    உதவிப்  பொறியாளரை 8144930069 என்ற எண்ணிலும், துணைப் பகுதி பொறியாளரை 8144930216 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Office Transfer ,Drinking Water Board ,Drinking Water Board Office , Drinking Water Board Workshop, Office, Transfer
× RELATED என்ஐடி கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக வங்கியில் பணபரிவர்த்தனை