×

சென்னை விமான நிலையத்தில் 1.8 கோடி தங்கம், கரன்சி பறிமுதல்: 10 பேர் கைது

சென்னை: இலங்கையில் இருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அசாருதீன் (24), இலியாஸ் (21), புதுக்கோட்டையை சேர்ந்த  அப்துல்கலாம் ஆசாத் (23), அசாருதீன் ஆகியோர் சுற்றுலா பயணிகள் விசாவில் வெளிநாடு சென்றுவிட்டு இலங்கை வழியாக சென்னைக்கு வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால், தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டபோது 4 பேரின் ஆசனவாயில் சிறு பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றப்பட்ட சிறு சிறு பார்சல்கள் இருந்தன. அதில் தங்கக் கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.  அவர்களது கூட்டாளிகள் 3 பேர் ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் நேற்று அதிகாலை 4 மணிக்கு வருவதாக தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த அவர்களது கூட்டாளிகளான சென்னையை சேர்ந்த முகமது இம்ரான் கான் (30), ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது மசூர்அலி (30), முகமதுகான் (41)  ஆகிய மூன்று பேரின் உடமைகளை சோதனை செய்தனர்.

அவர்களது உள்ளாடைகளில் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. 7 பேரிடம் இருந்து 2 கிலோ மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு 80 லட்சம்.  இதற்கிடையே நேற்று காலை 8.10 மணிக்கு துபாயில் இருந்து எமிரேட் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த முகமது ரஷாபுதீன் (22), கடலூரை சேர்ந்த முகது இப்ராஹிம் (70) துபாய் சென்று, சென்னை திரும்பினர்.அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு சோதனை செய்தபோது, உள்ளாடையில் 700 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைக்கபட்டிருந்தது தெரியவந்தது இதன் மதிப்பு ₹29 லட்சம். இருவரையும் கைது செய்து பறிமுதல் செய்தனர்.

இருவரின் சூட்கேஸில் 6000 வெளிநாட்டு சிகரெட்டுகள் 5 உபயோகப்படுத்தப்பட்ட பழைய லேப்டாப்கள் இருந்தன. அதன் மதிப்பு 1 லட்சம் அதையும் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் 9 பேரிடம் இருந்து 1.1 கோடி மதிப்புடைய 2.7 கிலோ தங்கம் மற்றும் சிகரெட்கள், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

செருப்பில் அமெரிக்க டாலர்கள்
சென்னையில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு இலங்கை செல்லும்  ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானம் புறப்பட தயாரானது. அதில் பயணம்செய்ய வந்தவர்களை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த அப்தீன் (67), இந்த விமானத்தில் இலங்கை வழியாக சிங்கப்பூர் செல்ல வந்தார். சுங்க அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அவர் அணிந்திருந்த தோல் செருப்பு வழக்கத்தைவிட சற்று வித்தியாசமாக இருந்தது. எனவே அவரது செருப்பை கழற்றி சோதனை செய்தபோது, ரகசிய அறை வைத்து கட்டுக்கட்டாக அமெரிக்க கரன்சி இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு 7 லட்சம். அதை பறிமுதல் செய்து, அப்தீனை கைது செய்தனர்.

Tags : Chennai airport , Chennai airport, gold, currency, 10 arrested
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்