×

ஏர் இந்தியாவுக்கு எரிபொருள் சப்ளையை வழங்க முடிவு

புதுடெல்லி: ஏர் இந்தியாவுக்கு எரிபொருள் சப்ளையை நிறுத்தும் முடிவை எண்ணெய் நிறுவனங்கள் ஒத்தி வைத்துள்ளன. ஏர் இந்தியா நிறுவனம் கடன் சுமையில் தத்தளிக்கிறது. இந்த நிறுவனத்தை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நஷ்டத்தில் உள்ளதால், விமான எரிபொருள் வாங்கியதற்கான தொகையை கூட எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த நிறுவனம் வழங்கவில்லை. இந்த வகையில் சுமார் 5,000 கோடிக்கு மேல் பாக்கி உள்ளது. பாக்கி தொகையை தராவிட்டால் ஏர் இந்தியாவுக்கு விமான பெட்ரோல் சப்ளை செய்வது நிறுத்தப்படும் என இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை இந்த மாத துவக்கத்தில் அறிவித்திருந்தன.

இந்நிலையில், பெட்ரோல் சப்ளையை நிறுத்தும் முடிவை ஒத்திவைத்துள்ளதாக மேற்கண்ட எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து இந்த நிறுவன வட்டாரங்கள் கூறுகையில், ஏற்கெனவே உள்ள பாக்கி தொகையை செட்டில் செய்வதோடு, இனி வாங்கும் எரிபொருளுக்கும் அவ்வப்போது தொகையை தந்து விடுவதாக ஏர் இந்தியா நிறுவனம் கடிதம் மூலம் உறுதி அளித்துள்ளது. இதனால் எரிபொருள் சப்ளையை நிறுத்தும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றனர்.

வாங்கறவங்க இஷ்டம்பேரு கூட மாத்தலாம்:
ஏர் இந்தியா நிறுவனத்தை விற்கும் முயற்சியை மத்திய அரசு கடந்த மாதம் மார்ச் மாதம் மேற்கொண்டது. இதில் மத்திய அரசு 24 சதவீத பங்குகளை கொண்டிருக்கும். ஆனால், இதற்கு வரவேற்பு இல்லாததால் அனைத்து பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு வாங்கும் நிறுவனம், பிரபலமான பெயர் என்று கருதி ஏர் இந்தியா பெயரிலேயே இயக்கலாம். அல்லது பெயரை மாற்றிக்கொள்ளலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Air India , Air India, Fuel Supply
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...