×

காங். தேர்தல் அறிக்கையில் இருந்து பொருளாதார குழப்பத்திற்கான தீர்வை திருடிக் கொள்ளுங்கள்: பிரதமர் மோடிக்கு ராகுல் அறிவுரை

புதுடெல்லி: ‘பொருளாதார குழப்பத்திற்கான தீர்வை, காங்கிரசின் மக்களவை தேர்தல் அறிக்கையிலிருந்து பிரதமரும், நிதி அமைச்சரும் திருடிக் கொள்ள வேண்டும்,’ என டிவிட்டரில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களின் பொதுமக்களின் வாங்கும் திறன் அதிகளவில் இருப்பது வழக்கம். ஆனால், இது தலைகீழாக மாறி, செப்டம்பருடன் முடிந்த காலாண்டில், கடந்த 7 ஆண்டில் முதல் முறையாக நகர்ப்புற மக்களின் வாங்கும் திறன் மிக குறைந்த சதவீதத்தை எட்டியிருப்பதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகின.

இதனை குறிப்பிட்டு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘நகர்ப்புற இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மூழ்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தை மீட்க, அரசிடம் எந்த யோசனையும் இல்லை. எனவே, பொருளாதார குழப்பத்தை தீர்ப்பதற்கான யோசனையை, காங்கிரசின் மக்களவை தேர்தல் வாக்குறுதியில் இருந்து பிரதமரும், நிதி அமைச்சரும் திருடிக் கொள்ள வேண்டும். அதில், சிக்கலை கையாள்வதற்கான விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது,’ என விமர்சித்துள்ளார்.


Tags : Rahul ,Modi Cong. Election , Congress Election Report, Economy, PM Modi, Rahul
× RELATED மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாகி விட்டது: ராகுல் தாக்கு