×

மின்வாரிய ஊழியர்களுக்கு வரும் 23ம் தேதி அகவிலைப்படி

சென்னை: மின்சார வாரியத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உயர்த்தப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியை வரும் 23ம் தேதி வழங்குவதாக வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, மின்வாரிய ஊழியர்கள் கூறியதாவது: தமிழக மின்சார வாரியத்தில் பல்வேறு பிரிவுகளில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் பண்டிகை காலத்தின்போது அகவிலைப்படி வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், தமிழக அரசு கடந்த 1.7.2019 அன்று, மாநில அரசு பணியாளர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 17 சதவீதம் அகவிலைப்படி வழங்க ஆணையிட்டது.

இந்த ஆணையை பின்பற்றி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அதன் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உயர்த்தப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியை வழங்க திட்டமிட்டிருந்தது. இந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்ட தேதி 1.7.2019 முதல் 30.9.2019 வரை கணக்கிடப்பட்டு 3 மாதத்திற்கான நிலுவை தொகையை வரும் 23.10.2019 அன்று வழங்க உள்ளது. மேலும் அக்டோபர் மாதத்திற்கான அகவிலைப்படி நவம்பர் மாதம் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Electricity workers ,Electricity Board , 23rd,this month, electricity workers
× RELATED எல்ஐசி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்