×

டாஸ்மாக் அருகே குடிபோதையில் தகராறு அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் கார் டிரைவருக்கு சரமாரி அடி, உதை

சென்னை: தேனாம்பேட்டை டாஸ்மாக் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் டிரைவருக்கு சரமரியாக அடி உதை விழுந்தது. இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் கார் டிரைவராக சிவகுமார் என்பவர் வேலை செய்து வருகிறார்.  இவர் ேநற்று முன்தினம் இரவு தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் நடந்து  சென்று கொண்டிருந்தார்.
அப்போது டாஸ்மாக் அருகே செல்லும் போது பாரில் இருந்து வெளியே வந்த வாலிபர் எதிர்பாராத விதமாக சிவகுமார் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

இருவரும் போதையில் இருந்ததால் வாய் தகராறு முற்றி ஒருவரை ஒருவர் கடுமையாக சாலையிலேயே தாக்கி கொண்டனர். இதில் அமைச்சரின் டிரைவர் சிவகுமாருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இதையடுத்து சிவகுமார் தன்னை தாக்கிய வாலிபர் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையை சேர்ந்த மணிகண்டன்(25) என தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

Tags : O.S.Maniyan ,dispute ,car driver ,Tasmak ,Drunken minister , Drunken car collides , drunken minister OS Maniyan driver
× RELATED ஒடிசாவில் போஸ்டர் தகராறில் பாஜ தொண்டர் குத்தி கொலை