அய்யாக்கண்ணு பேட்டி சென்னையில் 21ல் எலிக்கறி சாப்பிடும் போராட்டம்

திருச்சி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு திருச்சியில் அளித்த பேட்டி: சிறு, குறு விவசாயிகள், பெரிய விவசாயிகள் என்று பிரிக்காமல் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில், ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு ஒரு நாள் போராட்டத்திற்கு அனுமதி கிடைத்து உள்ளது. எனவே வரும் 21ம் தேதி காலை 8 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் ஒருநாள் காத்திருப்பு போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் மொட்டை அடித்தல், எலிக்கறி, பாம்புக்கறி உண்ணுதல் போன்றவற்றை செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: