×

பெரம்பலூரில் ‘டெங்கு’ : ஏராளமானோர் ‘அட்மிட்’

பெரம்பலூர்: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வைரஸ் காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது பெரம்பலூர் மாவட்டத்திலும் டெங்கு அறிகுறிகளுடன் ஏராளமானோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை தாலுகாவில் ஏராளமானவர்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொண்டமாந்துறை பகுதியில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார்கள் அனுப்பப்பட்டதால் கை.களத்தூர் பகுதிகளிலும் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு சிகிச்சை அளிக்கத் தொடங்கினர்.

பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் மட்டுமே டெங்குக் காய்ச்சலுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேன் சென்டர் அமைந்துள்ள கட்டிடத்தின் மாடி அறையிலுள்ள,  படுக்கைகள் டெங்குக் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகிறது. இதேபோல் பூலாம்பாடியி லும், கை.களத்தூரிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் காணப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் மட்டுமன்றி, கிருஷ்ணாபுரம், வேப்பூர், காரை ஆகிய இடங்களில் உள்ள வட்டார அரசு மருத்துவமனைகளிலும், வாலிகண்டபுரம், பூலாம் பாடி பகுதிகளில் உள்ள மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்களிலும், லெப்பைக்குடிகாடு, அம்மாபாளையம், கொளக்காநத்தம் பகுதிகளில் இயங்கிவரும் முதன்மை ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதேபோல், பெரம்பலூர் மாவட்டத்தில் ஏராளமான கிராமங்களில் டெங்கு அறிகுறியுடன் சிகிச்சைக்காக குவிந்து வருகின்றனர்.

இதுகுறித்து பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துமனை பொறுப்பு அதிகாரியான டாக்டர் சரவணன் கூறுகையில், ‘‘பெரம்பலூர்  மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் டெங்குக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட  3 பேர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளித்து வருகிறோம். அதுவும் நெகட்டிவ் வைரஸ் ஃபீவர் தான். அவர்களும் குணமாகி 2 நாளில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார்கள். கிராமப்புறங்களில் பாதிக்கப் பட்டிருக்கிற தா என்பது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குந ரிடம் கேட்டுக் கொள்ளுங் கள் எனக் கூறிவிட்டார். சுகாதாரத்துறை துணை இயக்குநர் பதவியிலிருந்த டாக்டர் சம்பத் பதவி உயர் வில் சென்றுவிட்டதால், அரியலூர் மாவட்ட சுகாதா ரத்துறை  துணை இயக்கு நர் ஹேமந்த்சந் காந்தியே கூடுதல்பொறுப்பில் பெரம்பலூர் மாவட்ட த்தை கவனி த்துவருகிறார்.

Tags : Perambalur , Dengue
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி