முரசொலி பஞ்சமி நிலமா? நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்; நிரூபிக்காவிடில் நீங்கள் விலக தயாரா? ராமதாசுக்கு ஸ்டாலின் சவால்

சென்னை: சென்னையில் முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பஞ்சமி நிலம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார். முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பஞ்சமி நிலம் அல்ல என்றும், வழிவழியாக தனியாருக்கு சொந்தமான பட்டா மனை என்று மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலக தயாரி என்றும், ராமதாஸ் சொல்வதை நிரூபிக்க தவறி அது பச்சை பொய் என்றால் அவரும், அவரது மகனும் அரசியலை விட்டு விலக தயாரா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அசுரன் - மு.க.ஸ்டாலின் பாராட்டு

இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கிடையே, நடிகர் தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படத்தை தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் மு.க.ஸ்டாலின் பார்த்து ரசித்தார். அது மட்டுமின்றி நடிகர் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அசுரன் படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தை சாடும்- சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன். கதை, களம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷ்க்கும் பாராட்டுகள் தெரிவித்திருந்தார் மு.க.ஸ்டாலின்.

ராமதாஸ் குற்றச்சாட்டு

பஞ்சமி நிலம் குறித்துப் பேசும் அசுரன் படம் அல்ல அது பாடம். அசுரன் படத்தை ஆஹா, என பாராட்டும் ஸ்டாலின் கற்றுக் கொண்ட பாடத்தை, ஏற்று, முரசொலி அலுவலகத்துக்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நாம் நம்புவோம் என்று ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: