முரசொலி இருக்கும் இடம் பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் : ஸ்டாலின் டீவீட்

சென்னை : தற்போது முரசொலி இருக்கும் இடம் பஞ்சமி நிலமே அல்ல என திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளர். வழி வழியாக தனியாருக்கு சொந்தமாக பாத்தியப்பட்ட பட்டா மனை என பட்டா நகலுடன் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு, மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது  “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! .அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட

பட்டா- மனை!. நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்!.அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால்,  அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என்றுள்ளார்.

Related Stories: