×

மாற்றுமுறை ஆவணச் சட்டப்படி அரசு அறிவிக்கும் விடுமுறை, தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது: ஐகோர்ட் விளக்கம்

சென்னை: மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் கீழ் அரசு அறிவிக்கும் பொது விடுமுறை, தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது விளக்கம் அளித்துள்ளது. மேலும், தலைவர்கள் மறைவு உள்ளிட்ட காரணங்களால் அறிவிக்கப்படும் விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் உயிரிழந்தார். அவர் மறைவையொட்டி ஜூலை 30ம் தேதி மாற்றுமுறை ஆவண சட்டத்தின் கீழ் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்தது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பொது நேர பணியாளர்கள் மற்றும் காலை நேர பணியாளர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் அந்நிறுவனம் விடுமுறை அளித்தது. மதியம் மற்றும் இரவு நேரங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த நிர்வாகம் 30ம் தேதி விடுமுறை அறிவிக்கவில்லை அப்படி விடுமுறை வழங்கப்பட்டால் அதற்கு பதிலாக ஆகஸ்ட் 8ம் தேதியன்று பணியாற்ற வேண்டும் என அறிவித்தது. இதனை ஏற்க மறுத்த தொழிற்சங்கத்தினர் ஜூலை 30ம் தேதி பணிக்கு வராததால் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து தொழிற்சங்கம் சார்பில் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் 47 தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் மாற்றுமுறை ஆவண சட்டத்தின்படி, அறிவிக்கப்படும் அரசு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது எனவும் தெளிவுபடுத்தினார். மேலும் மனுதாரர் நிறுவனம் நிபந்தனையுடன் விடுமுறை அளிக்க முன்வந்த போதும் அதனை ஏற்காத தொழிற்சங்கங்களுக்கு அன்றைய தினம் ஊதியம் பெற உரிமை இல்லை என தெரிவித்தார். இதையடுத்து, சேலம் தொழிலாளர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags : Icort description. Holidays ,government ,companies , Transition Document Law, Public Holidays, Private Institution, Not Applicable, Madras High Court
× RELATED மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!