×

பி.எம்.சி. வங்கி டெபாசிட்தாரர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

டெல்லி : ரூ.4,355 கோடி முறைகேட்டில் சிக்கியுள்ள பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி வாடிக்கையாளா்களின் வைப்புத்தொகை முழுமையாக திரும்ப கிடைப்பதை உறுதி செய்யக் கோரும் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதே சமயம், கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளா்கள் மும்பை உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வாடிக்கையாளா்களின் பணத்தை பி.எம்.சி. வங்கி எச்.டி.ஐ. எல் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு முறைகேடாக கடன் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.


Tags : Mumbai High Court ,Piemci Supreme Court of India ,Bank Depositors , Punjab-Maharashtra Co-operative Bank, Mumbai High Court, Supreme Court, Advice
× RELATED அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமின் வழங்க மும்பை உயர்நீதிமன்றம் மறுப்பு