×

துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.26.50 லட்சம் மதிப்பிலான தங்கத் தகடுகள் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல்

மதுரை: துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் ஒலி பெருக்கி மூலம் கடத்திவரப்பட்ட சுமார் 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கத் தகடுகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாக நுண்ணறிவு பிரிவினருக்கு துபாயில் இருந்து வரும் பயணி ஒருவர் தங்கத்தை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து மத்திய சுங்க இலாக நுண்ணறிவு பிரிவினர் வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்தனர். மேலும் பயணிகள் அனைவரின் உடமைகளையும் சுங்க இலாக நுண்ணறிவு பிரிவினர் தீவிரமாக சோதனையிட்டனர்.

இந்நிலையில் துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வந்த பயணிகளிடம் அவர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடலூரை சேர்ந்த சர்புதீன் என்பவரது உடமைகளை சோதனை செய்ததில் அவருடைய ஒலிபெருக்கியில் மறைத்து வைத்து 44 தங்க தகடுகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கடத்தல் இளைஞரை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள் மொத்தம் ரூ.26 லட்சம் மதிப்பிலானவை எனவும் சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Tags : Madurai airport ,Dubai ,Madurai ,Dubai airport , Dubai, smuggling, Rs.26.50 lakh, gold plate, Madurai airport, seized
× RELATED மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக...