×

ஜி 7 மாநாடு அமெரிக்க அதிபர் டிரம்பின் கோல்ப் ரிசாட்டில் நடத்தப்போவதாக அறிவிப்பு

வாஷிங்டன்: ஜி 7 மாநாடு டிரம்பின் கோல்ப் ரிசாட்டில் நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜி 7 மாநாடு புளோரிடா மாகாணத்தில் உள்ள அமெரிக்க அதிபர் டிரம்பின் மியாமி கோல்ப் சுற்றுலா மையத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 10 முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, டிரம்ப்பிற்கு அதிகளவில் வருவாய் ஈட்டக்கூடிய கோல்ப் கிளப் முக்கிய சுற்றலா தலமாக கருதப்படுகிறது. மியாமி விமான நிலையம் அருகே அமைந்த பூங்காக்களை ஒட்டி இது அமைந்துள்ளது. அண்மையில் இந்த சுற்றலா தலம் தனது புகழை இழந்து வருகிறது.

இதையடுத்து, டிரம்பின் இந்த அறிவிப்பு தனது சொந்த லாபத்திற்காக பதவியை துஷ்பிரயோகம் செய்வதாக எதிர்கட்சியினரின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. ஆனால் ஜி 7 மாநாட்டிற்காக 10க்கும் மேற்பட்ட இடங்கள் பரிசீலிக்கப்பட்டதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும் தமது சுற்றலா தலம் விமான நிலையத்திற்கு அருகில் இருப்பதாகவும், அருகில் நுற்றுக்கணக்கான தங்கும் விடுதிகள் இருப்பதாகவும், தனி தனி கட்டிடங்களாக வெளிநாட்டு தலைவர்களை தங்க வைக்கும் வசதிகளுடன் இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ஜி 7 அமைப்பின் 7 உறுப்பு நாடுகளுடன் ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Trump ,G7 ,golf resort ,US , G7 Conference, Trump, Golf Resort, Announcement
× RELATED டிக்டாக்கை மைக்ரோசாப்டிடம் விற்க டிரம்ப் 45 நாள் கெடு