சிறுமியிடம் பாலியல் தொல்லை; பள்ளி காவலாளி கைது

புதுடெல்லி: இரண்டரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி காவலாளி கைது செய்யப்பட்டார்.வடமேற்கு டெல்லி பிதாம்புரா பகுதியில் உள்ள சிறுவர் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டரை வயது சிறுமி சேர்க்கப்பட்டாள்.
கடந்த 5ம் தேதி சிறுமியின் அந்தரங்கப்பகுதியில் வலி எடுப்பதாக கூறினாள். இதை சிறுமியின் தாய் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏதாவது அலர்ஜியாக இருக்கும் என்று விட்டுவிட்டார். அதன்பின் 4 நாள் விடுமுறை முடிந்து சிறுமி அக்டோபர் 9ம் தேதி பள்ளிக்கு செல்ல மறுத்தாள்.

அப்போது தாய் விசாரித்த போது பள்ளி காவலாளி தன்னிடம் அசிங்கமாக நடப்பதாகவும், பாலியல் தொல்லை தந்ததாகவும் தெரிவித்தார்.இதுதொடர்பாக சிறுமியின் தாய் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார். மேலும் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காவலாளியை கைது செய்தனர்.

Tags : school guard , Girl, sex, Arrested, school guard
× RELATED சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்