×

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியல் வெளியீடு: சின்னங்களும் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில் நீதிமன்றங்களின் உத்தரவையடுத்து  உள்ளாட்சி தேர்தல் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.  இதன்படி தமிழகம்  முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் மற்றும் அடிப்படை பணிகளை படிப்படியாக செய்து வருகிறது. இதை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக  தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜ, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்,  தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், திரிணாமூல் காங்கிரஸ், மாநில கட்சிகளான  திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு அவர்களின் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் பதிவு செய்யப்பட்ட 247 கட்சிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.  மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், டவுன் பஞ்சாயத்து தலைவர், 2ம் நிலை பேரூராட்சி, நகராட்சி தலைவர்கள், மாநகராட்சி மேயர் உள்ளிட்ட தேர்தலுக்கு 30 தனி  சின்னங்களும், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர், டவுன் பஞ்சாயத்து தலைவர், நகராட்சி மற்றும் மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு 30 தனி சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறாத கிராம  ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர் தேர்தலுக்கும் 30 சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Parties , Authorized Parties, Symbols
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...